தேமுதிகவுக்கு பாஜக அழைப்பு.

by Editor / 26-07-2023 03:56:33pm
தேமுதிகவுக்கு பாஜக அழைப்பு.

 ராமநாதபுரத்தில் வரும் 28ஆம் தேதி நடக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த என்டிஏ கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திற்கு தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்படாமல் இருந்தது. தாங்கள் எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் அழைப்பு விடுத்தார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் பரப்புரையின் ஒரு பாகமாக இந்த யாத்திரை பார்க்கப்படுகிறது.
 

 

Tags :

Share via