திமுக பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் திருச்சிக்கு வருகை.

by Editor / 26-07-2023 04:03:54pm
திமுக பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் திருச்சிக்கு வருகை.

திருச்சியில் இன்று மாலை நடைபெறும் திமுக பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்துகொள்ள இன்று வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கார்கில் போரில் இந்தியாவுக்குக்காக போர் புரிந்து உயிர்துறந்த வீரர்களை நினைவுகொள்ளும் தினத்தை முன்னிட்டு, திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் மேஜர் சரவணன் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு ஆகியோர் உடனிருந்தனர். இதனை அடுத்து, திருச்சி, சமயபுரம் பகுதியில் புரத்தாக்குடி ஊரில் மகளிர் உரிமை தொகை டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமை நேரில் சென்று பார்வையிட உள்ளார். பின்னர் திருச்சியில் திமுகவினர் பயிற்சி பட்டறை நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo