இன்று தமிழக முதலமைச்சர் விஜய் இணைய வழியில் பத்திரப்பதிவு முறையை தொடங்கி வைத்தார்.

by Admin / 17-08-2026 07:15:52pm
இன்று தமிழக முதலமைச்சர் விஜய் இணைய வழியில் பத்திரப்பதிவு முறையை தொடங்கி வைத்தார்.

இன்று தமிழக முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்தில் வருகை இல்லா ஆவண பதிவு என்ற புதிய இணைய வழி பத்திரப்பதிவு முறையை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள மனைப் பிரிவுகளில் விற்கப்படும் முதல் மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் விற்கப்படும் முதல் வீடு விற்பனை ஆவணங்களுக்கு இந்த ஆன்லைன் பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த முறையால் வீடு அல்லது மனை வாங்குபவர்கள் பதிவுத்துறை அலுவலர்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்தோ அல்லது வீடு விற்பனை செய்யும் நிறுவனங்களின் அலுவலகங்களில் இருந்தோ இணைய வழியில் பத்திரப்பதிவை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் ஆவண பத்திரம் எழுதுபவர் மனையை வீட்டை வாங்குபவர் சாட்சிகள் ஆகிய அனைவருக்கும் ஆதார் எண் சரிபார்ப்புடன் கணினியுடன் கூடிய இணைய இணைப்பு வெப் கேமரா புகைப்படம் எடுத்தல் , பயோமெட்ரிக் மூலமாக கைரேகை கருவிழி படலம் மூலமாக ஆவணங்கள் உருவாக்கப்படும். இணைய வழியில் பதிவு செய்யப்படும் பத்திரங்களை சரிபார்த்து பதிவு செய்ய அல்லது திருத்த திருப்பி அனுப்ப பதிவாளருக்கு 24 மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பத்திரப்பதிவின் மூலமாக பத்திரத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் க்யூ ஆர் கோடு மூலமாக ஆவண எண் பதிவு செய்யப்பட்ட தேதி போன்ற விவரங்கள் உள்ளடங்கும். இந்த இணைய வழி பத்திரப்பதிவு மூலம் பத்திரங்களின் உடைய பிரதிகளை 60 நாட்கள் வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo