1.30 லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு

by Staff / 21-07-2024 01:57:10pm
1.30 லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பு

அசாமில் மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் படிப்படியாக மீண்டு வருகின்றனர். ஆனால் இன்னும் 10 மாவட்டங்களில் 1.30 லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கம்ரூப், மோரிகான், திப்ருகர், ஷிவ்சாகர், கோலாகாட், நாகோன், தேமாஜி, கோல்பாரா, கம்ரூப் பெருநகரம் மற்றும் கச்சார் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு வெள்ளம், நிலச்சரிவு, மின்னல் மற்றும் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது.
 

 

Tags :

Share via

More stories