சபரிமலை ஐயப்பன் கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்கள் விரைவு.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர்கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளை முன்னிட்டு கேரள மாநில அரசின் பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டதின் பேரில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 04 வது படை பிரிவின் சீனியர் கமாண்டன்ட் அகிலேஷ் குமார் உத்தரவின் பேரில் துணை கமாண்டன்ட் சங்கர் பாண்டியன் மேற்பார்வையில் ஆய்வாளர் J.K.மண்டல் தலைமையிலான 67 பேர் கொண்ட 2 குழு தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு உதவும் வகையில்
பேரிடர் மீட்பு உபகரணங்களுடன் விரைந்தனர்.
தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் மருத்துவ முதலுதவி சிகிச்சை கருவிகள், மரம் வெட்டும் கருவிகள், ரப்பர் படகுகள், லைஃப் பாய், மற்றும் கயிறுகள்,
நவீன தொலைதொடர்பு சாதனங்கள் ஆகியவற்றுடன் சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் பக்தர்களுக்கு உதவிடவும் விரைந்தனர். ஒரு அணியினர் பம்பை நதிக்கரை பகுதியிலும், மற்றொரு அணியினர் சன்னிதானம் பகுதியிலும் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் இந்த தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் ஐயப்ப பக்தர்களுக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்படும் பட்சத்தில் அவர்களை உடனடியாக மீட்டு உரிய முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்ற பணிகளில் ஈடுபட உள்ளனர்.
மேலும் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வளாகத்தில் 24*7 அவசர கட்டுபாட்டு மையம் செயல்படுகிறது. கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியோரிடம் தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் நேரடி தொடர்பில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்கள் விரைவு: