அ.தி.மு.க வில் அதிகரிக்கும் உட்கட்சி பூசல்
அதிமுகவில் முன்னாள் அமைச்சா் களான சி.வி.சண்முகம்,,கே.பி.முனுசாமி இடையே பனிப்போர் தினந்தோறும் வலுத்து வருகிறது.. அ.தி.மு.க கட்சிக்கு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக இருந்தாலும் விழுப்புரத்தை பொறுத்தவரை சண்முகம் சொல்வதையே அதிமுகவினர் கேட்கின்றனர்.. இது முனுசாமிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முனுசாமி, எடப்பாடி பழனிசாமிக்கு தெரியபடுத்த. எடப்பாடி பழனிசாமியும் சண்முகத்தை கண்டித்துள்ளார். ஆனால்,சி.வி. சண்முகம்அதை பொிதாகஎடுத்துக்கொள்ளவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tags :