தமிழ் நாட்டிற்கு பெரிய பாதிப்பு இருக்காது - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமசந்திரன்

by Staff / 02-12-2023 01:09:55pm
தமிழ் நாட்டிற்கு பெரிய பாதிப்பு இருக்காது - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமசந்திரன்

மிக்ஜம் புயல் ஆந்திராவில் கடப்பதால், தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பு இருக்காது என்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,  புயல் முன்னெச்சரிக்கையாக, வட மற்றும் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.. தமிழ்நாட்டில் 4,000 முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன. ,சென்னையில் ,162 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன என்றும்.. மழையினால் ஏற்படும் உயிரிழப்புக்கு நிவாரணமாக ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்றும் கால்நடை இழப்புக்கு அதிகபட்சமாக ரூ.30,000 வழங்கப்படும் என்றும். குடிசை வீடுகளுக்கு ரூ.5,000 நிவாரணமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தாா்.

 

Tags :

Share via

More stories