வெற்றி பெற செய்ய வேண்டியது நம் கடமை - உதயநிதி
திருச்சியில் இன்று நடைபெற்ற திமுக இளைஞர் அணி செயல்வீரர் கூட்டத்தில் அமைச்சர் உதயந்தி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாட்டை வெற்றி பெற செய்ய வேண்டிய பொறுப்பு, நம் ஒவ்வொருவரின் கடமை. அல்லும் பகலும் அயராது உழைக்கும் கழகத் தலைவரும், முதல்வருமான ஸ்டாலினின் லட்சியங்களை முன்னெடுத்து செல்ல சேலத்தில் வரலாறு படைப்போம்” என தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Tags :



















