நள்ளிரவிலிருந்து அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் விளையாட்டை விளையாடுவதற்கு தடை.

தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஒழுங்கு முறை ஆணையம் சில கட்டுப்பாடுகளை ஆன்லைன் விளையாட்டுக்கு விதித்துள்ளது.
.18 வயதுக்கு உட்பட்டவர்கள் பணம் கட்டி விளையாடுவதற்கு தடை.இணைய வழி விளையாட்டுக்களில் பணம் கட்டி விளையாடுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு , நள்ளிரவில் இருந்து அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் விளையாட்டை விளையாடுவதற்கு தடை.
தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த சட்டம் 2022ல் இயற்றப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஒரு ஆன்லைன் கேம்மிங் ஆணையத்தை அமைத்துள்ளது அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்ட இச்சட்டம் ஆளுநர் ஒப்புதலுடன் தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துச் சட்டம் 2022 பிரிவு மூன்றின் கீழ் தமிழ்நாடு ஆன்லைன் கேம்ஸ் ஆணையத்தை உருவாக்கியுள்ளது.
ஐந்து பேர் கொண்ட குழு தமிழ்நாடு ஆன்லைன் கேம் ஆணையத்தின் பணி ,ஆன்லைன் விளையாட்டு தொடர்பான விஷயங்களில் மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கும் .தமிழ்நாடு ஆன்லைன் கேம்ஸ் ஆணையம் ஒரு சிவில் நீதிமன்ற அதிகாரங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :