திருச்சி - காரைக்குடி ரயில்வே மின் பாதையில் 17ஆம் தேதி ஆய்வு நெருங்கவோ.கடக்கவோ.. வேண்டாம் என எச்சரிக்கை.

by Editor / 15-02-2022 10:30:14pm
திருச்சி - காரைக்குடி ரயில்வே மின் பாதையில் 17ஆம் தேதி ஆய்வு நெருங்கவோ.கடக்கவோ.. வேண்டாம் என எச்சரிக்கை.

திருச்சி - காரைக்குடி ரயில்வே பிரிவில்  மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்று விட்டன. இந்த புதிய 89 கிலோ மீட்டர் தூர மின் ரயில் பாதையில் பெங்களூரு தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் வியாழக்கிழமை(17.02.2022) யன்று சட்டப்பூர்வ ஆய்வு நடத்துகிறார். திருச்சியிலிருந்து காலை 09.05 மணிக்கு புறப்படும் ஆய்வு ரயில் வழியில் ரயில் நிலையங்கள், ரயில்வே கேட்டுகள், மேம்பாலங்கள், தமிழ்நாடு மின்சார வாரிய மின் வழித்தட குறுக்கீடு, உப மின் நிலையங்கள் ஆகியவற்றில் ஆய்வு நடத்த இருக்கிறார். ஆய்வின்போது முதன்மை மின் பொறியாளர் ஆர்.கே. மேத்தா, மின்மயமாக்கல் திட்ட மேலாளர் சமீர் டிஹே, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த்  ஆகியோர் பங்கு பெறுவர். பின்பு ஆய்வு ரயில் மாலை 03.20 மணிக்கு காரைக்குடி ரயில் நிலையத்திற்கு  வந்து சேரும். பிறகு காரைக்குடி - திருச்சி இடையே மின்சார இன்ஜின் பொருத்திய ரயில் மூலம் வேக சோதனை ஓட்டம் நடத்த இருக்கிறார். எனவே பொதுமக்களும் ரயில் பாதை அருகே வசிப்போரும் மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில் பாதையை கடக்கவோ, அருகில் நெருங்கவோ வேண்டாம் என எச்சரிக்காய் விடுக்கப்பபட்டுள்ளது.

 

Tags : 17th inspection of Trichy - Karaikudi railway line

Share via

More stories

Logo