திமுக மாணவர் அணி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

by Admin / 30-06-2026 02:29:38am
 திமுக மாணவர் அணி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

 தமிழகம் முழுவதும் இன்று அமைச்சர் சரத்குமாரை கைது செய்ய வேண்டும் என்று திமுக மாணவர் அணி போராட்டம் நடத்தி வருகிறது. அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாக தமிழக முழுவதும் திமுகவினர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

.தமிழக மனித வள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறி அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி திமுக மாணவர் அணி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் போட்டியின் போது அமைச்சர் சரத்குமார் ஒரு வெள்ளை நிற கோடியை கையாண்டது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது அந்த பொடியை தனது குழந்தைக்கு கொடுப்பதற்காக நசுக்கப்பட்ட காய்ச்சல் மாத்திரை என்று அமைச்சர் சரத்குமார் விளக்கம் அளிக்கின்றார் எனினும் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த திமுக அவர் பொது இடத்தில் போதை பொருள் படுத்தியதாக குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டது போராட்டத்திற்கான மனுவை ஐந்து நாள்களுக்கு முன்பே சமர்ப்பிக்கவில்லை என்ற காரணத்தை கூறி சென்னை எழும்பு ராஜரத்தினம் மைதானம் அருகே நடக்கவிருந்தவர் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்தது.தடையை மீறி போராட்டம் நடத்தியதால் முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியம் எழும்பூரிலும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் ஆர்.பிரியாஆகியோர் புரசைவாக்கம் பகுதியில் காவல்துறையினர் கைது செய்யப்பட்டு திருமண மண்டங்களில் வைக்கப்பட்டனர் .தடையை மீறிய கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள தி.மு.க தலைவர் மு. க. ஸ்டாலின், பயமுறுத்துவதன் மூலமாக தனது பிம்பத்தை காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் தமிழாக வெற்றிகழாக அரசின் இந்த அராஜகம் நீடிக்காது என்று விமர்சித்து உள்ளார். இதனிடையே வழக்கறிஞர் ஒருவர் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அமைச்சர் சரத்குமாருக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க கோரி மனு ஒன்றை அளித்துள்ளாா்..

 

Tags :

Share via
Logo