அதி நவீன அஸ்ராம் ஏவுகணைகளை இந்திய விமான படையின் மிக் 29 ரக போர் விமானங்களில் பொருத்தநடவடிக்கை
அதி நவீன அஸ்ராம் ஏவுகணைகளை இந்திய விமான படையின் மிக் 29 ரக போர் விமானங்களில் பொருத்த பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மிக் 29 விமானங்களில் அஸ்ராம் ஏவுகணங்களை ஒருங்கிணைத்து சோதனை செய்வதற்கான விருப்ப கோரிக்கை அறிக்கையை பாதுகாப்பு அமைச்சகம் மார்ச் 25 அன்று வெளியிட்டது .தற்போது மிக் 29 விமானங்களில் உள்ள சோவியத் காலத்து ஆர் 73 ஏவுகணைகளுக்கு பதிலாக அதிக திறன் கொண்ட இந்த அஸ்ராம் ஏவுகணைகள் பொருத்தப்பட உள்ளன .ஆர் 73 ஏவுகணைகளின் தாக்குதல் வரம்பு 10 -15 கிலோமீட்டர் ஆக இருக்கும் நிலையில், அஸ்ராம் ஏவுகணைகள் 25 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டவை .ஐரோப்பிய நிறுவனமான எம். பி. டி. ஏ தயாரிக்கும் இந்த ஏவுகணைகள் ஏற்கனவே, இந்தியாவின் தேஜஸ் மற்றும் ஜாக்குவார் போர் விமானங்களில் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளன. இந்த மேம்பாடு இந்தியாவின் சுமார் 55 மிக் 29 விமானங்களுக்கு வான்வழிப் போர் திறனை வழங்கும் என்றும் இது சீனா மற்றும் பாகிஸ்தானின் நவீன ஏவுகணை தொழில்நுட்பத்திற்கு நிகரான பதிலடி கொடுக்கும் வல்லமை உடையவை. இதன் காரணமாக ஏவுதளங்கள் சோதனை கருவிகள் மற்றும் விமானிகளுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன.
Tags :



















