ஆயுத பூஜை கூட்டத்தை சமாளிக்க  சென்னையில் 3 இடங்களில் இருந்து பஸ்கள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

by Editor / 07-10-2021 03:24:22pm
ஆயுத பூஜை கூட்டத்தை சமாளிக்க  சென்னையில் 3 இடங்களில் இருந்து பஸ்கள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, கொரானா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதற்காக ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, 3 பேருந்து நிலையங்களிலிருந்து 12 ந் தேதி (செவ்வாய்கிழமை மற்றும் 13 ந் தேதி ஆகிய நாட்களில் பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்ற கீழ்கண்ட தடப்பேருந்துகள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது இயக்கப்பட்டது போன்று கீழ்கண்ட அட்டவணைபடி இயக்கப்படும் மற்றும் இதர பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
பேருந்து நிலையம் மற்றும் இயக்கப்படும் பேருந்துகளின் விவரம் பின்வருமாறு:-


1. தாம்பரம் ரெயில் நிலைய பேருந்து நிலையம் திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள். போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.


திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.


2. பூந்தமல்லி பேருந்து நிலையம் வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள்.


3. கோயம்பேடு பேருந்து நிலையம் மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வழி இசிஆர்), மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெங்கொண்டம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர்).


எனவே பயணிகள் மேற்கூறிய பேருந்து சேவையை முழுமையாக பயன்படுத்திகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட இடங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும். பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories