விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் - அன்புமணி
கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி தொகையை ரூ.75,000 ஆக உயர்த்திய தமிழக அரசின் அறிவிப்பு விவசாயிகளின் கடன் சுமையை போக்க போதுமானது அல்ல என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் 8.21 லட்சம் விவசாயிகளுக்கு வெறும் ரூ.35,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படுவது அநீதியானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, சிறு, குறு விவசாயிகளின் கடன்களை முழுமையாகவும், பெரு விவசாயிகளின் கடனில் 50% தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Tags :


















