கள்ளக்காதலன் வெட்டிப் படுகொலை.. கணவர் கைது
திண்டுக்கல், சிறுமலை தாளக்கடையை சேர்ந்தவர் வீரமணி (24). இவரது மனைவி நாகலட்சுமி (22)-க்கும், நத்தம், வேலாயுதம்பட்டியை சேர்ந்த அரவிந்தன் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வீரமணி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அரவிந்தனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து தாளைக்கடை பிரிவு அருகே உள்ள குப்பை கிடங்கில் மறைத்து வைத்தார். இந்த நிலையில், வீரமணியை போலீசார் தற்போது கைது செய்தனர்.
Tags :



















