தனிப்படை காவலர் எரித்துகொலை-அதிர்ச்சியில் காவல்துறையினர்.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே முக்குளம் அழகாபுரி கிராமத்தை சேர்ந்த மலையரசன் (36) இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தனிப்படை காவலராக பணிபுரிந்துவரும் நிலையில் காவலர் மலையரசன் எரிக்கப்பட்ட நிலையில்அவரது உடல் நேற்று முன்தினம் மதியம் மதுரை விமான நிலையம் அருகே உள்ள ஈச்சனேரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
மதுரை பெருங்குடி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் உயிரிழந்த நபர் விருதுநகரை சேர்ந்த மலையரசன் என்பதும், இவர் சிவகங்கை காளையார் கோயிலில் பணிபுரிந்த தனிப்படை காவலர் என்பதும், இவரது மனைவி கடந்த 1ஆம் தேதி விபத்தில் காயம் ஏற்பட்டு மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் தான் மதுரை பெருங்குடி அடுத்த ஈச்சனேரி பகுதியில் பாதி எரிந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.அவரது உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்த நிலையில் உறவினர்கள் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என மருத்துவமுறை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது
இந்த நிலையில் இன்று உடற்கூறு ஆய்வு முடிந்து அவரது உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மதுரை தத்தனேரி மயானத்தில் 21குண்டுகள் முழங்க போலீஸ் மறியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அப்போது இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடலை பார்த்த தனிப்படை காவலரின் இரு மகன்களும் அப்பா...அப்பா... வாங்கப்பா... என விபத்தில் தாயையும் இழந்து தற்போது தந்தையையும் இழந்து நிற்கும் குழநதைகள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைத்தது.
மதுரை பெருங்குடி போலீசார் மற்றும் சிவகங்கை மாவட்ட தனிப்படை போலீசார் இச்சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.தனிப்படை காவலர் எரித்துகொலை செய்யப்பட சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags : தனிப்படை காவலர் எரித்துகொலை-அதிர்ச்சியில் காவல்துறையினர்.