பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு
கடலூர் மாவட்டத்தில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு. சூரப்பநாயக்கன் சாவடி பகுதியில் பாமக பிரமுகர் சிவசங்கர் மீது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கொலை வெறித்தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றது. இதையடுத்து, சிவசங்கர், உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் பாமக நிர்வாகி மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags :



















