பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா தொடங்கியது:

by Editor / 30-10-2022 09:26:23am
பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா தொடங்கியது:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தின் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் வந்து மரியாதை செலுத்த உள்ளனர்.

 இதன் காரணமாக பசும்பொன் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில்உயர் கோபுரங்கள் அமைத்தும்   ஆள் இல்லாத உளவு விமானம், சிசிடி கண்காணிப்பு கேமரா, ரோந்து வாகனம், ஆகியவற்றின்  மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் 

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு  தென் மண்டல ஐஜி  அஸ்ராகர்க் தலைமையில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும்  பத்தாயிரத்திற்கு மேற்பட்ட  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசியல்  கட்சி தலைவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் போக்குவரத்து இடையில் இன்றி வந்து செல்ல அவர்களுக்குஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories