உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற  இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட நிர்வாகி கைது.

by Editor / 05-10-2024 08:16:45am
உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற  இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட நிர்வாகி கைது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தேவராஜ்-ஐ தாக்கி அரிவாளால் வெட்ட முயன்ற இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட நிர்வாகி முகமது பாஷித்(22)கைது அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதாக வழக்கு பதிவு செய்த போலீசாரை அவமதித்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்ய சென்ற போது உதவி ஆய்வாளர் தேவராஜை தாக்கி அரிவாளால் வெட்ட முயன்ற முகமது பாஷித் மீது குளச்சல் போலீசார் கொலை முயற்சி ஆயுத சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த நிலையில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்

 

Tags : உதவி ஆய்வாளரை வெட்ட முயன்ற  இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட நிர்வாகி கைது.

Share via