2 முறை தற்கொலை முயற்சி: பாலிவுட் நடிகை

by Staff / 25-02-2023 03:48:00pm
2 முறை தற்கொலை முயற்சி: பாலிவுட் நடிகை

பாலிவுட் நடிகை உர்பி ஜாவேத் விதவிதமான ஆடைகளை அணிந்து எப்போதும் சர்ச்சையில் சிக்குவார். சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், அதிர்ச்சிகரமான கருத்துகளை கூறியுள்ளார்.'நான் எனக்கு பிடித்த ஆடைகளை அணிந்தேன், ஆனால் என் தந்தை அதை ஏற்கவில்லை, அவர் என்னை சித்திரவதை செய்தார்'. என் அம்மாவை அடித்து சித்ரவதை செய்து வந்தார். இதையெல்லாம் தாங்க முடியாமல் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார். இவர், சமூக வலைதளங்களில் மிக ஆக்டீவாக இருந்து வருகிறார். நாள்தோறும் புதுப்புது ஆடைகளை அணிந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார்.

 

Tags :

Share via