இன்று அமைச்சர்களின் துறை மாற்றம்..?
தமிழக அமைச்சரவையில் மன்னார்குடி எம்.எல்.ஏ.வாக உள்ள டி.ஆர்.பி.ராஜா இடம்பெறுகிறார். மேலும், சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட உள்ளன. பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 10.30 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
மேலும் சில அமைச்சர்களின் துறைகளை மாற்றம் செய்யவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ள நிலையில், அது தொடர்பான அறிவிப்பும் இன்று வெளியாக வாய்ப்புள்ளது. அதே போல் அடுத்த புதிய தலைமை செயலாளர் யார் என்பது பற்றிய அறிவிப்பும் வெளியாக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags :