முன்னாள் ராணுவ வீரர் கைது

by Staff / 27-06-2024 10:41:03am
முன்னாள் ராணுவ வீரர் கைது

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த எட்வர்ட் துரை (63). முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு ஒரு மகன் இருந்த நிலையில், அவர் திடீரென இறந்து விடவே திருச்செங்கோடு அருகே அனாதை ஆசிரமத்தில் இருந்து 11, 12 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், அவர் தத்தெடுத்த சிறுமிகளிடம் ஆபாச படங்களைக் காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார்.திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தினர் புகார் அளித்ததைத் தொடர்ந்து நேரில் வந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், எட்வர்ட் துரையைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். எட்வர்டு துரையை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 

Tags :

Share via

More stories

Logo