காந்தி ஜெயந்தியன்று பேரணி நடத்த ஆர்எஸ்எஸ்க்கு தகுதி இல்லை. வைகோ

by Staff / 28-09-2022 02:23:11pm
காந்தி ஜெயந்தியன்று பேரணி நடத்த ஆர்எஸ்எஸ்க்கு தகுதி இல்லை. வைகோ

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த மதிமுக பொதுச் செயலாளர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

மத்திய அரசால் இன்று தடை செய்யப்பட்டுள்ள அமைப்பு பல்வேறு சமூக நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது, வெள்ள காலங்களிலும் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளிலும் சமூக நலம் கருதி பல தொண்டாற்றி இருக்கிறது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. ஆனால் சில இடங்களில் நடந்த வன்முறையை காரணம் காட்டப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மத்திய அரசு ஜிஎஸ்டி வரி உயர்வை குறைத்திருக்க வேண்டும். மேலும் தமிழக முதல்வர் சட்ட ஒழுங்கு பிரச்சனையில் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டுகின்ற வகையிலே நடவடிக்கைகள் எடுத்து சிறந்த முறையில் ஆட்சி நடத்தி வருகிறார்.

காந்தி ஜெயந்தி அன்று ஆர். எஸ். எஸ் அமைப்பு பேரணி குறித்த கேள்விக்கு தமிழகத்தில் ஆர். எஸ். எஸ். அமைப்பு காந்தி ஜெயந்தி அன்று பேரணி நடத்த தகுதி இல்லை என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo