கல்லிடைக்குறிச்சி ரயில்நிலையத்தில் 55 பயணிகளை ஏற்றாமல் தென்காசிக்கு வந்த ரயில்
திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையே மாலை 7 மணிக்கு இயக்கப்படும் வண்டி எண். 06030 வாராந்திர சிறப்பு ரயில் நெல்லையிலிருந்து 07.07. 2024 இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் 28/7/2014 வரை இயக்கப்படுகிறது.. இந்த ரயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடைகிறது.இதே போல மேட்டுப்பாளையம்-நெல்லை வாராந்திர சிறப்பு ரயில் வண்டி எண். 06029 மேட்டுப்பாளையத்தில் இருந்து 8.7.2024 முதல் 29.7.2024 கிழமைகளில் மாலை 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். இந்த ரயில் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, கோவை, பொள்ளாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இந்த ரயில் திருநெல்வேலியிலிருந்து மேட்டுப்பாளையம் புறப்பட்ட நிலையில் கல்லிடைக்குறிச்சி ரயில்நிலையத்தில் நிற்காமல் வந்துவிட்டதால் அங்கு இந்த ரயிலுக்காக 55 க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்தநிலையில் அவர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகினர்.இதன் தொடர்ச்சியாக தென்காசிரயில்நிலையத்தில்9 மணிக்கு புறப்படவேண்டிய திருநெல்வேலி-மேட்டுப்பாளையம்நிறுத்திவைக்கப்பட்டு ஈரோடு ரயிலில் கல்லிடைக்குறிச்சி ரயில்நிலையத்திலிருந்த பயணிகள் ஏற்றிஅனுப்பிவைக்கப்பட்டனர்.அவர்கள் தென்காசி ரயில்நிலையத்திற்குவந்து திருநெல்வேலி-மேட்டுப்பாளையம்ரயிலில் 10.30 மணியளவில் ஏற்றி அனுப்பிவைத்தனர்.ரயில்வே அதிகாரிகளின் மொத்தனத்தால் திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் காலத்தத்தோடு மேட்டுப்பாளையத்திற்கு சென்றது.
Tags : கல்லிடைக்குறிச்சி ரயில்நிலையத்தில் 55 பயணிகளை ஏற்றாமல் தென்காசிக்கு வந்த ரயில்