மலேசியாவுக்கு கல்வி சுற்றுலா: புறப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள்

by Staff / 24-02-2025 01:09:03pm
மலேசியாவுக்கு கல்வி சுற்றுலா: புறப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள்

அரசு பள்ளி மாணவர்கள் 52 பேர் மலேசியாவுக்கு நேற்று (பிப். 23) கல்விச் சுற்றுலா கிளம்பிய நிலையில் அவர்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வழியனுப்பி வைத்தார். பள்ளி அளவில் கல்வி மற்றும் மன்ற செயல்பாடுகள், நூல் வாசிப்பு உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களை உலக அளவில் புகழ் பெற்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
 

 

Tags :

Share via