யார் துரோகி என உலகிற்கே தெரியும் என்று ஈபிஎஸ்-க்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், எப்போது தேர்தல் வரும் என்றும் அதிமுக அரசு எப்போது மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் மக்கள் காத்துக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி நடைபெற்ற நேரத்தில் எல்லாம் காங்கிரஸ் - திமுக கூட்டணியின் மத்திய அரசு நிதி நெருக்கடியை கொடுத்து இம்சை அரசாக இருந்ததை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது என்று கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, இருந்த போதும் தனது நிர்வாகத் திறமையால் அனைத்து சவால்களையும் சமாளித்தவர் ஜெயலலிதா என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Tags :