இரண்டு கொலை முயற்சி வழக்குகளில் தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு

by Editor / 28-07-2023 08:40:30pm
 இரண்டு கொலை முயற்சி வழக்குகளில் தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு

தென்காசி மாவட்டம்,வீ.கே.புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜபாண்டியை சேர்ந்த சண்முக பாண்டி(62)  என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் சண்முக பாண்டியை சுரண்டை காவல் ஆய்வாளர்  பெருமாள் கைது செய்து சிறையில் அடைத்தார்.பின்னர் பிணையில் வந்த சண்முகபாண்டி கடந்த 2021 ஆம் ஆண்டு தனது மனைவியின் தவறான நடத்தைக்கு மாமியார் உடந்தை என்று நினைத்து தனது மனைவியின் சகோதரர், மனைவியின் தாய் மற்றும் மனைவியுடன்  தொடர்பில்  இருந்ததாக சந்தேகப்படும் நபர் ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில்  சண்முக பாண்டியை சுரண்டை காவல் ஆய்வாளர் சுரேஷ் கைது செய்து சிறையில் அடைத்தார்.இந்த 2 வழக்கின் விசாரணையானது தென்காசி உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கினை விசாரணை செய்த நீதிபதி மாரீஸ்வரி  குற்றவாளிக்கு  சண்முக பாண்டி மீது இரண்டு கொலை முயற்சி வழக்குகளுக்கும் தலா 07 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். குற்றவாளி சண்முக பாண்டி கடந்த 2021 ஆம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவர் இன்று வரை சிறையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் மாரிக்குட்டி ஆஜரானர்.மேலும் இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த வி.கே. புதூர் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 

Tags :

Share via