குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.... சுற்றுலா பயணிகள் குளிக்க மூன்றாவது நாளாக தொடரும் தடை.

by Editor / 16-07-2024 11:26:16am
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.... சுற்றுலா பயணிகள் குளிக்க மூன்றாவது நாளாக தொடரும் தடை.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தற்போது தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி போலீசாரால் குளிக்க தடை விதிக்கப்பட்டது.நேற்று முழுவதும் வெள்ளப்பெருக்கு நீடித்த நிலையில் இன்று காலையும் நீர்வரத்து சீராகததால் குற்றால அருவிகளில் மூன்றாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை தொடர்கிறது.நாளை பண்டிகை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும் நிலையில் அருவிகளில் குளிக்க அனுமதியை எதிர்நோக்கி சுற்றுலா பயணிகள் எதிர்நோக்கி காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.... சுற்றுலா பயணிகள் குளிக்க மூன்றாவது நாளாக தொடரும் தடை.

Share via