போதை பொருள் விற்பனையை ஒழிக்க திவீரம் காட்டும் தென்மண்டல ஐஜி.

தென்காசி மாவட்டத்தில் சட்டவிரோதமாக புகையிலைப்பொருட்கள் விற்பனையோடு கஞ்சாவிற்பனை யும் கல்லாகட்டிவருகிறது .தென்காசி,புளியரை,கடையநல்லூர்,மேக்கரை,பண்பொழி,வடகரை,அச்சன் புதூர்,சுரண்டை,பாவூர்சத்திரம் ,சங்கரன் கோவில், புளியங்குடி,என மாவட்டத்தின் முக்கிய நகரங்களிலும் கேரளா எல்லைகளிலும் வியாபாரம் களைக்கட்டியுள்ளது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அடிக்கடி சோதனைகளை தொடர்ந்தாலும் காவல் துறையினரின் கண்களில் படாமலும் சில பகுதிகளில் வியபாரம் களைகட்டி வருகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.இதன்தொடர்ச்சியாக தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ராகர்க் தென்மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தி கண்காணித்து வருகிறார்.இதன் தொடர்ச்சியாக தனி காவல்துறை குழு அமைத்து போதைப்பொருட்களை விறபனையை கண்டுபிடித்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர் .கடந்த சில நாட்களாக கஞ்சா,புகையிலைப்பொருட்கள் விற்ற நபர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளது .முழுவீச்சில் காவல்துறையினர் களமிறங்கினால் போதை பொருட்கள் விறபனையை முற்றிலுமாக தென்காசி மாவட்டத்தில் ஒழிக்கப்பட்டு விடுமென கூறப்படுகிறது.
Tags :