வீடுகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இல்லை - அமைச்சர் அறிவிப்பு

வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இல்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக மின்கட்டண உயர்வு குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளதாகவும், தற்சமயம் மின்கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும் பிறப்பிக்கப்படவில் என்றும் தெரிவித்துள்ளார். எனினும் வீட்டு மின் நுகர்வோருக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இருக்கக்கூடாது என்றும், தற்போதுள்ள இலவச சலுகைகளும் தொடர வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Tags :