ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் ரம்ஜான் காலத்தில் இது போன்ற தாக்குதல்கள் நடத்துவது பாகிஸ்தான் பாசாங்குதனம்.

by Admin / 15-03-2026 01:31:13am
ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் ரம்ஜான் காலத்தில் இது போன்ற தாக்குதல்கள் நடத்துவது பாகிஸ்தான் பாசாங்குதனம்.

ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதல்களை இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வமாக கண்டித்து உள்ளது. பாகிஸ்தானின் இந்த செயல் ஆப்கானிஸ்தானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அப்பட்டமாக மீறும் செயல் என்று இந்தியா கண்டித்து உள்ளது இந்த தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கும் பொது கட்டமைப்புகள் சேதம் அடைந்ததற்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்து தொடர்பாளர்  ரன்தீர் ஜெய்ஸ்வால் கண்டனத்தை பதிவு செய்து உள்ளார். இது ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்றும் இறையாண்மையில் உள்ள ஆப்கானிஸ்தான் என்ற கருத்தாக்கத்திற்கு பாகிஸ்தான் நிர்வாகம் இன்னும் பகிர்மையுடனே இருப்பதையும் இது காட்டுவதாக இந்தியா விமர்சனத்தை முன் வைத்துள்ளது ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ஹரிஷ் பர்வதனேனி ரம்ஜான் காலத்தில் இது போன்ற தாக்குதல்கள் நடத்துவது பாசாங்கு தனமான போக்கு என்றும் இது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்றும் சாடி உள்ளார். பாகிஸ்தான் தனது உள்நாட்டு தோல்விகளை மறைக்க அண்டை நாடுகளின் மீது இத்தகைய தாக்குதலை நடத்துகிறது என்றும் ஆப்கானிஸ்தானின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை இந்தியா முழுமையாக ஆதரிப்பதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தம் கருத்தை உறுதியாக பதிவு செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் ரம்ஜான் காலத்தில் இது போன்ற தாக்குதல்கள் நடத்துவது பாகிஸ்தான் பாசாங்குதனம்.
 

Tags :

Share via

More stories

Logo