இன்று த.வெ.க கூட்டணிகட்சிகள் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம்முதலமைச்சா் விஜய் தலைமையில் நடக்கிறது.
இன்று த.வெ.க கூட்டணிகட்சிகள் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம் கோவளத்தில் முதலமைச்சா் விஜய் தலைமையில் நடக்கிறது.தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கு ஆதரவளித்து வரும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சமீபத்தில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய மதிமுக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். பொதுவுடமைக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிக்க உள்ளதாக தகவல். தமிழக வெற்றிக் கழக அரசு அமைவதற்கு காரணமாக இருந்த கட்சிகளுக்கு முதலமைச்சர் விஜய் நன்றி தெரிவிப்பதோடு, சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான சூழலை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. புதிதாக ஒரு கூட்டணி உருவாக்கப்பட்டு அதற்கு பெயர் சூட்டக்கூடிய நிகழ்வும் இந்தக் கூட்டத்தில் நிகழக்கூடும். அத்துடன் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது.
Tags :


















