பல்வேறு நாடுகளில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ள நிலையில் கோரனோ வைரஸ் இன்னும் முழுமையாக அழியவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் படிப்படியாக ஒரு மாற்றம் அடையும் எனவும் மேலும் ஒரு மாற்றம் அடைய வாய்ப்பிருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே பொது மக்கள் முக கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags :