நியூஸ் க்ளிக் அலுவலகத்துக்கு சீல்

'நியூஸ் க்ளிக்' என்ற செய்தி இணையதளத்துக்கு சீனாவுடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவினர் இன்று பத்திரிகையாளர்கள் மற்றும் அந்த அமைப்பின் ஊழியர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். டெல்லி, நொய்டா, காஜியாபாத் ஆகிய இடங்களில் டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு தீவிர சோதனை நடத்தினர். இந்நிலையில், இணையதள செய்தி நிறுவனமான NEWSCLICK அலுவலகத்துக்கு டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறை சீல் வைத்தது. மேலும், சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் கீழ் நியூஸ் கிளிக்கிற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags :