நாம் தமிழர் கட்சி தலைமை ஒரு ங்கிணைப்பாளர் சீமான் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
இன்று சென்னை கிண்டியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒரு ங்கிணைப்பாளர் சீமான் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். 49 தலைப்புகளில் 462 பக்கங்களைக் கொண்ட விரிவான ஒரு அறிக்கையை அவர் வெளியிட்டதோடு அது குறித்தான தம் நிலைப்பாட்டையும் விளக்கினார். தம் தேர்தல் வாக்குறுதியாக தமிழ்நாட்டில் ஐந்து தலைநகரங்கள் உருவாக்கப்படும் என்றும் தமிழகத்தின் தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றம் திருச்சியில் அமையும் என்றும் ஆடு மாடு மேய்ப்பது அரசு வேலை ஆக்கப்படும் என்றும் சென்னையில் உச்ச நீதிமன்றத்தின் கிளை அமைக்கப்படும் என்றும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு தனி தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் தற்சார்பு பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட திட்டங்களாக அவர் அறிக்கையில் வெளிப்படுத்தி உள்ளார். 2 34 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்தத் தேர்தல் திராவிடத்திற்கும் தமிழ் தேசியத்திற்கும் ஆன போட்டி என்றும் தேர்தலை எதிர்கொள்வதற்கு பொதுமக்கள் நிதி அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags :















.jpg)

.jpg)
