வெட்டிக் கொல்லப்பட்ட வளர்ப்பு நாய்

கேரளாவின் திருச்சூர் மாவட்டம் வடக்கேக்காடு அருகே வைலத்தூரில் வளர்ப்பு நாயை பக்கத்து வீட்டுக்காரர் வெட்டிக் கொன்றார். அம்ரீஷ் என்பவருக்கு சொந்தமான ரூனி என்ற இரண்டு மாத பொமரேனியன் நாய் கொல்லப்பட்டது. இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் நடந்துள்ளது. நாய் குழந்தைகளுடன் வீட்டிற்குள் வந்ததால் ஆத்திரமடைந்த ஸ்ரீஹரி என்பவர், அதனை வாளால் வெட்டிக் கொன்றார். அமரீஷ் மனைவி சோனா கண் முன்னே நாய் கொல்லப்பட்டது. இந்த சம்பவத்தை பார்த்த அம்ரிஷ் மனைவி சோனா மயங்கி விழுந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :