ஸ்ரீ மாலையம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் வைபவம்

by Admin / 07-07-2024 10:03:35am
 ஸ்ரீ மாலையம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் வைபவம்

தூத்துக்குடி மாவட்ட சிந்தலக்கரையில் விஸ்வகர்மா சமூகத்துக்கு பாத்தியப்பட்ட அருள்தரும் ஸ்ரீ வீரபையம்மாள் ஸ்ரீ மாலையம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் வைபவம் இன்று நடைபெற்றது. 

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூலை 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு மங்கள இசை, ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம்,  புண்யாஹவாஜனம், வாஸ்து பூஜை, மகா கணபதி ஹோமம், அஸ்வ பூஜை, கோ பூஜை, கஜ பூஜைகள் நடைபெற்றன. 

அதனைத் தொடர்ந்து யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை லலிதா சகஸ்ரநாம ஹோமம், அனைத்து தெய்வங்களுக்கும் யந்திர பிரதிஷ்டை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

இன்று காலை நான்காம் கால யாக வேள்வி பூஜை நிறைவு பெற்று அதிகாலை 5.30 மணியளவில் யாகசாலையில் இருந்து கும்ப கலசங்கள் எழுந்தருளி வேத மந்திரங்கள் முழங்க கோயில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தன. அதைத்தொடர்ந்து 6.15 மணியளவில் அருள்தரும் ஸ்ரீ வீரபையம்மாள், ஸ்ரீ மாலையம்மாள், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கருப்பராயர் சுவாமி கோபுர விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தேவி ஸ்ரீ வீரபையம்மாள், ஸ்ரீ மாலையம்மனுக்கு  சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஸ்ரீ வீரபையம்மாள் ஸ்ரீ மாலையம்மாள் ஆலய மகா கும்பாபிஷேக கமிட்டி நிர்வாகிகள் சுரேஷ்குமார், பாண்டியன், முத்துராயலு, அழகு குருசாமி, வெங்கட்ராஜ், பாலமுருகன், சுந்தர்ராஜ், ராம்தாஸ், கஜேந்திரன், திருப்பதி ராஜா, அழகுராஜ், முனியாண்டி, அழகர்ராஜ், மணிகண்டன், கிருஷ்ணன், ராஜ்குமார், கார்த்திகேயன், வித்யாசாகர், மணிமாறன் உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 ஸ்ரீ மாலையம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் வைபவம்
 

Tags :

Share via