அதிமுக சார்பில் ஆகஸ்டு 20ல் மதுரையில் மாபெரும் எழுச்சி மாநாடு- தொடர் ஓட்ட ஜோதி

by Admin / 19-08-2023 12:14:08am
அதிமுக சார்பில் ஆகஸ்டு 20ல் மதுரையில் மாபெரும் எழுச்சி மாநாடு- தொடர் ஓட்ட ஜோதி

அதிமுக சார்பில் ஆகஸ்டு 20ல் மதுரையில் மாபெரும் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளதையொட்டி - கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நெல்லை மாவட்டத்தில் இருந்து வந்த தொடர் ஓட்ட ஜோதியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சிறப்பான வரவேற்பு அளித்து ஊர்வலமாக சென்றனர்.

அதிமுக நெல்லை மாவட்டம் சார்பில் தொடர் ஓட்ட ஜோதியை முன்னாள் அரசு வழக்கறிஞர் அணி அன்பு அங்கப்பன், தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் பங்கேற்ற தொடர் ஓட்ட ஜோதி நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜன்,தொடர் ஓட்ட ஜோதியைதொடங்கி வைத்தனர், இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இனமணியாச்சியில் சந்திப்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நெல்லை மாவட்டத்தில் இருந்து வந்த தொடர் ஓட்ட ஜோதியை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்த தொடர் ஓட்ட ஜோதி இனமணியாச்சி  சந்திப்பிலிருந்து தொடங்கிய தொடர் ஜோதி ஓட்டம் அண்ணா பேருந்து நிலையம் முன்பு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மீண்டும்  அண்ணா பேருந்து நிலையத்தில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மற்றும் அதிமுக தொண்டர்கள் கோவில்பட்டி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.மீண்டும் ஜோதி மதுரைக்கு புறப்பட்டு சென்றனர். நிகழ்ச்சியில் நகர செயலாளர் விஜயபாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், அம்மா பேரவை மாவட்ட இனச் செயலாளர் நீலகண்டன், நகர மன்ற உறுப்பினர் கவியரசன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் விஜயகுமார், புதூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் முனி சக்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, வேல்ராஜ், அம்பிகை பாலன்,அண்ணாமலை விக்னேஷ், சாப்டூர் அப்பன், கனகராஜ்,கோபி, முருகன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

 

அதிமுக சார்பில் ஆகஸ்டு 20ல் மதுரையில் மாபெரும் எழுச்சி மாநாடு- தொடர் ஓட்ட ஜோதி
 

Tags :

Share via
Logo