கள்ளழகர் எழுந்தருளும் தங்ககுதிரை உள்ளிட்ட வாகனங்கள் தயார் படுத்தும் பணிகள் தொடக்கம்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பிரசித்தி பெற்ற அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா வரும் மே 8-ம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வரும் பத்தாம் தேதி சுந்தரராஜ பெருமாள் என்ற கள்ளழகர். தங்கபல்லக்கில் கள்ளழகர் வேடத்துடன் மதுரை நோக்கி புறப்படும் நிகழ்ச்சியும், 12ஆம் தேதி அதிகாலை 05.30 மணியளவில் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
தொடர்ந்து, வரும் 13ஆம் தேதி வண்டியூர் வீரராகவ பெருமாள் திருக்கோயிலில் இருந்து சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்திற்கு புறப்படும் கள்ளழகர் அங்கு தங்க கருட வாகனத்தில் எழுந்தருவி மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்வும் நடைபெற உள்ளது.
இதற்காக கள்ளழகர் திருக்கோயில் உள்ள தங்ககுதிரை வாகனம், சேஷவாகனம், மற்றும் கருடவாகனம் , கள்ளழகர் புறப்படும் தங்கப்பல்லக்கு ஆகியவற்றை தனி அறையில் வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் தற்போது கோவில் உட்பிரகார வளாகத்தில் அதனை தயார்படுத்தும் பணி கோவில் துணை ஆணையர் யக்ஞநாராயணன் தலைமையில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்ககளில் உள்ள சிறுசிறு பழுதுகள் நீக்கப்பட்டு வர்ணம் பூசி மெருகேற்றும் பணி நடந்து வருகிறது.
இதில், திருக்கோவில் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டு உள்ள நிலையில், அலங்காரம் செய்யும் பணி முடிவுற்று, தங்ககுதிரை வாகனம் மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கும், சேஷ மற்றும் கருடவாகனம் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கும் டிராக்டர் மூலம் விரைவில் கொண்டு செல்லப்பட உள்ளது.
Tags : கள்ளழகர் எழுந்தருளும் தங்ககுதிரை உள்ளிட்ட வாகனங்கள் தயார் படுத்தும் பணிகள் தொடக்கம்.