தாயின் பிறந்த நாள் தரிசனம் செய்ய திருவண்ணாமலை வந்த ராகவா லாரன்ஸ்.

by Editor / 03-05-2025 10:02:04am
தாயின் பிறந்த நாள் தரிசனம் செய்ய திருவண்ணாமலை வந்த ராகவா லாரன்ஸ்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலிலுக்கு தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்பட நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் என அனைவரும் சமீப காலமாக  தரிசனம் செய்ய வந்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் இன்று  பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தனது தாயுடன் அண்ணாமலையார் திருக்கோவிலில்  சாமி தரிசனம் செய்தார். தனது தாயின் பிறந்த தினமான இன்று தாயுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வருகை தந்த நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் முன்னதாக சம்பந்த விநாயகரை தரிசனம் செய்து பின்னர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார். தொடர்ந்து திருக்கோயில் சார்பாக அவருக்கு பிரசாதம் மற்றும் மரியாதை வழங்கப்பட்டது.கோயிலுக்கு வந்திருந்த நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் உடன் பக்தர்கள், பொதுமக்கள், திருக்கோவில் ஊழியர்கள் உள்ளிட்டோர் குழு புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
 

 

Tags : தாயின் பிறந்த நாள் தரிசனம் செய்ய திருவண்ணாமலை வந்த ராகவா லாரன்ஸ்.

Share via