நீரழிவு நோயாளர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய பழங்கள் என்னென்ன..?

நாட்டில் இன்று இருக்கும் மோசமான உணவு பழக்கங்கள் அனைவரையும் தக்கிவ்ருகிறது.இதன் காரணமாக நீரழிவு நோயால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகி வருகிறது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் கவனம் செலுத்துவது அவசியம். ஏனெனின் இந்த நோய்க்கு மருந்துவில்லைகள் எவ்வளவு உதவிச் செய்கின்றதோ, அதே அளவுக்கு உணவில் கட்டுபாடு காட்ட வேண்டும்.
கிளைசமிக் இண்டக்ஸ் குறைவான பழங்களை சாப்பிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஏனெனின் இது குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும். அத்துடன் நார்ச்சத்துக்களும் ஊட்டசத்துக்களும் உள்ளன.
அந்த வகையில், நீரழிவு நோயாளர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய பழங்கள் என்னென்ன என்பதனை பதிவில் பார்க்கலாம்.
1. மாம்பழங்கள்
கோடைக்காலங்களில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தான் மாம்பழங்கள். இந்த பழம் சர்க்கரை அளவை அதிகப்படுத்தும் என்ற தவறான கருத்து இருக்கிறது. ஆனால் சர்க்கரையை அளவாக வைத்து கொள்ளும். அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ ஆகிய சத்துக்கள் உள்ளன. இதனால் சர்க்கரை நோயாளர்கள் பயம் இல்லாமல் சாப்பிடலாம்.
2. கொய்யாப்பழம்
கொய்யாப்பழத்தில் குறைவான கிளைசமிக், நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை சர்க்கரை திடீரென உயர்வதை தடுக்கிறது. செரிமானம் சீராக்கப்பட்டு, வயிற்றை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
3. ஆப்பிள்
3. ஆப்பிள் தினமும் ஒன்று சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவு உயர்வை தடுக்கிறது. நார்ச்சத்துக்கள் மற்றும் பாலிஃபினால்கள் இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். தோலூடன் ஆப்பிள் சாப்பிட்டாலும் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
4. பேரிக்காய்
பேரிக்காய் இயற்கையான இனிப்பு சுவை கொண்டது. இதில் கிளைசமிக் இண்டக்ஸ் குறைவாக உள்ளது. அதே சமயம் நார்ச்சத்தக்கள் அதிகமாக உள்ளது. இது சர்க்கரையை உறிஞ்சி விடும். சாலட்களில் கலந்து சாப்பிடலாம்.
5. ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தின் சாற்றை பருகக் கூடாது என்பார்கள். ஆனால் பழத்தை முழுமையாக சாப்பிடலாம். இதிலுள்ள கிளைசமிக், நார்ச்சத்துக்கள் செரிமானத்தை இலகுவாக்குகிறது. வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
Tags :