பாமகவின் உண்ணாவிரத போராட்டம் ரத்து .

by Staff / 23-06-2025 10:32:51am
பாமகவின் உண்ணாவிரத போராட்டம் ரத்து .

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று நடைபெறவிருந்த பாமகவின் உண்ணாவிரத போராட்டம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமகவில் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவரும் இணைந்து ஒற்றுமையாக கட்சியை வழிநடத்த வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அக்கட்சி நிர்வாகி ம.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், ராமதாஸ் வேண்டுகோளுக்கிணங்க போராட்டம் ரத்து செய்யப்படுவதாக தற்போது தெரிவித்துள்ளார்.

 

Tags : பாமகவின் உண்ணாவிரத போராட்டம் ரத்து 

Share via