ஓம்பிர்லாவுக்கெதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

by Admin / 12-03-2026 09:13:03am
 ஓம்பிர்லாவுக்கெதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கெதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் குரல் வாக்களிக்கும் மூலம் நிராகரிக்கப்பட்டது .எதிர் கட்சிகளின் கடும் அமளி மற்றும் முழக்கங்களுக்கு இடையே இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது .சபாநாயகர் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாகவும் எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு பேச போதுமான நேரம் வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியும் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த தீர்மானத்தை கடுமையாக விமர்சித்தார். அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்துவது ஜனநாயகத்தின் அடித்தளத்தை கேள்விக்கு உட்படுத்துவதாகவும் என்றும் அவர் குறிப்பிட்டார் .காங்கிரஸ் எம்.பி. முகமது சாவித் கொண்டு வந்த இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமைதியால் சபை ஒத்திவைக்கப்படுவதற்கு முன்பு தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிராகரிக்கப்பட்டது.

 ஓம்பிர்லாவுக்கெதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.
 
Tags :

Share via