"அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முதலமைச்சர் தலைமையேற்க வேண்டும்" அன்புமணி ராமதாஸ்

காவிரி விவகாரம் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நாளை தலைமை செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும். தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அன்புமணி இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
Tags :