அதிமுக மாநிலங்களவை வேட்பாளராக தம்பிதுரை மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார் .

by Admin / 05-03-2026 12:42:11am
 அதிமுக  மாநிலங்களவை வேட்பாளராக தம்பிதுரை மீண்டும்  அறிவிக்கப்பட்டுள்ளார் .

மாநிலங்களவை தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக என இரு கட்சிகளுக்கும் ஆறு இடங்கள் காலியாகி உள்ளன. திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா, கான்ஸ்டன்ட்டைன் ரவீந்திரன் இருவரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரசுக்கு ஒரு தொகுதியும் தேமுதிகவிற்கு ஒரு இடம்ஒதுக்கப்பட்டுள்ளது  . இந்நிலையில் ,அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் அதிமுகவுக்கு கிடைக்கக்கூடிய இடங்களில் ஒரு இடத்திற்கு கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய எம்பி தம்பிதுரை மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்றும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo