சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்

by Editor / 17-08-2021 09:33:29am
சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பேசி முடிக்கப்பட்ட கூலி உயர்வை முறையாக வழங்க கோரி விசைத்தறி முதலாளிகள் சங்க கட்டிடத்தை முற்றுகையிட்டு விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிரதான தொழிலாக விசைத்தறி தொழில் உள்ளது. இந்த விசைத்தறி கூடங்களை நம்பி சங்கரன்கோவில், புளியங்குடி, சுப்புலாபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தொழிலாளர்களுக்கும் விசைத்தறி முதலாளிகளுக்கும் கூலி உயர்வு கோரி பேச்சுவார்த்தை நடைபெறும் கடந்த மே மாதம் 41 நாட்கள்  வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பின்னர் விசைத்தறி முதலாளிகள் விசைத்தறி தொழிலாளர்களுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்10 சதவீத கூலி உயர்வு தருவதாகவும் அதை ஆகஸ்ட் 1-ஆம் தேதியிலிருந்து நடைமுறை படுத்துவதாகவும் கோட்டாட்சியர் முன்பு ஒப்பந்தம் போட்டனர்.  இந்த நிலையில் விசைத்தறி முதலாளிகளின் கூட்டமைப்பான மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேசன் சங்க உறுப்பினர்கள் கூலி உயர்வை நடைமுறைப்படுத்த மறுப்பதாகவும். அரசு அதிகாரிகள் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கூறி மாஸ்டர் விவர்ஸ் அசோசியேசன் சங்கக் கட்டிடத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via