தீபாவளி பண்டிகைக்காக கூடுதலாக 32 ரெயில் சேவைகள்.

by Staff / 18-10-2022 05:05:01pm
தீபாவளி பண்டிகைக்காக கூடுதலாக 32 ரெயில் சேவைகள்.

இந்திய ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், ரெயில் பயணிகள் வசதிக்காக பண்டிகை காலத்தில் கூடுதலாக 32 ரெயில் சேவைகள் இயக்கப்படும் என இந்திய ரெயில்வே அறிவித்து உள்ளது. இதற்கு முன்பு, 179 ரெயில் சேவைகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்ட சேவையையும் சேர்த்து மொத்தம் 211 சிறப்பு ரெயில் சேவைகள் இயக்கப்படும். இதன்படி, 2,561 முறை ரெயில் சேவை இயங்கும். நாடு முழுவதும் உள்ள முக்கிய பகுதிகளை இந்த சிறப்பு ரெயில்கள் இணைக்கும் வகையில் சேவை திட்டமிடப்பட்டு உள்ளது என அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo