குடிநீர் வாரியத்தில் நவீன ஊழல்.. அன்புமணி குற்றச்சாட்டு

by Editor / 06-06-2025 03:17:02pm
குடிநீர் வாரியத்தில் நவீன ஊழல்.. அன்புமணி குற்றச்சாட்டு

குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல் நடந்துள்ளதாகவும், ஆண்டு தோறும் ரூ.90 கோடி சுருட்டப்படுவது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கையில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை 40% முதல் 50% வரை குறைத்துக் கொடுப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.90 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. ஊதியத்தை சுருட்டுவதைப் போன்ற கொடுங்குற்றமும், பாவமும் உலகில் இல்லை என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via