தூத்துக்குடி-கொழும்பு இடையேயான தோணி போக்குவரத்து.

by Editor / 21-05-2025 09:34:44am
தூத்துக்குடி-கொழும்பு இடையேயான தோணி போக்குவரத்து.

 தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு மட்டும் 40 தோணிகள் காய்கறிகள், பழங்கள், கருவாடு, அத்தியாவசிய பொருட்கள் போன்ற சரக்குகளை ஏற்றி சென்று கொண்டிருந்தன. அதன் பிறகு சரக்கு பெட்டக கப்பல்களின் வருகையால் தோணி தொழில் மெல்ல மெல்ல நலிவடைய தொடங்கியது. கடந்த 2010-ம் ஆண்டு முதல் கொழும்புக்கு தோணி போக்குவரத்து அடியோடு நின்றுவிட்டது.

மாலத்தீவுக்கு மட்டுமே தற்போது தூத்துக்குடியில் இருந்து தோணி போக்குவரத்து நடைபெற்றுவந்த நிலையில் 
தூத்துக்குடி-கொழும்பு இடையே  தோணி போக்குவரத்து ஆண்டு முழுவதும், அனைத்து பருவகாலங்களிலும் மேற்கொள்ள மத்திய கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது. அதனால் தோணி தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

 

Tags : தூத்துக்குடி-கொழும்பு இடையேயான தோணி போக்குவரத்து.

Share via