சென்னையில் ஒரே பயணச்சீட்டு திட்டம்

by Staff / 17-11-2022 01:04:48pm
சென்னையில் ஒரே பயணச்சீட்டு திட்டம்

சென்னையில் ஒருங்கிணைந்த பயணச்சீட்டு வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. சென்னையில் மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் ஆகிய போக்குவரத்து வசதி இருக்கும் நிலையில் இந்த மூன்றிலும் பயணம் செய்ய ஒரே பயணச்சீட்டு வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட உள்ளது. பயணச்சீட்டு அமலுக்கு வந்தால் ஒரே டிக்கெட்டை எடுத்துக்கொண்டு மெட்ரோ ரயில் புறநகர் ரயில் மற்றும் மாநகர பேருந்து ஆகிய மூன்றிலும் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via